Saturday, 12 May 2012

பிகடன்ல வரப்போற என் பேட்டி:


பிகடன் நிருபர்: நீங்க ஏன் 'டுமீலா'னீர்கள் ?

டுமீல்: ம்..'பமீலா' ஆக முடியல.அதான் டுமீல்-ஆனேன்.இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா.ட்வீட்டர்காரனும்,கூகுள்காரனும் ஃப்ரீ அக்கவுண்ட் குடுக்கறான்.இத விட என்ன வேணும் எனக்கு?.

பிகடன் நிருபர்: நான் கேட்டது  எதுக்காக டுமீலானீங்கன்னு ?

டுமீல்: அப்டி கேளு! நானும் மொத  மொதல்ல கவித எழுதலாம்னுதான் கடைய(ப்ளாக்) தொறந்தேன்.பய புள்ள ஒரு பயலும் எட்டியே பாக்கல..அது சரி....ம்ஹூம்.....உனக்கு தெரியாததா...அவார்டு படம் என்னைக்கு ஓடிருக்கு இந்த நாட்ல.அந்த மாதிரி என்னோட சாகித்ய அகாடமி ரேன்ஜு கவிதைகளையும் யாரும் கண்டுக்கல.

பிகடன் நிருபர்: உங்க பழைய ப்ளாக் அட்ரெஸ் குடுங்களேன்.நான் படிச்சு பாக்குறேன்.

டுமீல்: ஹா!ஹா!ஹா!(சிரிக்கிறார்) அவார்டு ஃபிலிம் ரேஞ்சுக்கு ஏன் கவிதய கம்பேர் பண்ணவுன்ன அத படிக்க விரும்பற உங்க ஆர்வத்த நான் பாராட்டறேன்.இருந்தாலும், உங்க நன்மைக்கு தான் சொல்றேன்.அத படிச்சு உங்க கண்ண கெடுத்துக்க வேணாம்.நாளைக்கு கண் தானம் பண்ண அது உதவும்.

பிகடன் நிருபர்:  உங்களுக்கும் கமலா டாலுக்கும் என்ன சம்பந்தம் ? ரெண்டு பேரும் போன்லயே... ரொம்ப நேரம் பேசறதா நியூஸ் வருதே.

டுமீல்: சே சே அப்டியெல்லாம் ஒன்னும் இல்ல...அவங்கள எனக்கு 'கைனா' பட சூட்டிங்-லயேருந்தே  தெரியும்.நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் அவ்வளவு தான்.(அப்பாடா தப்பிச்சேன்)

பிகடன் நிருபர்:ட்வீட்டர்ல இவ்வளவு பிரபலமாயிட்டேங்களே! அடுத்து சினிமாவுல நடிக்கிற எண்ணம் ஏதும் இருக்கா ?

டுமீல் :  நம்ம கேபிள் சார் படம் எடுத்தா ஹீரோவாப் போடறேன்ருக்கார்.பாப்போம்...நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்.நான் ஹீரோவா நடிக்கறத தமிழ்நாட்டு மக்கள் பாக்கணும்னு தலவிதி இருந்தா அத யாரால மாத்த முடியும்.

ட்வீட்டர்ல Fake ID வரமா ? சாபமா?. உங்களுக்கும் மமீதாவும் என்ன சண்டை ?--அடுத்த வாரம்...


கமெண்டுகள்:
@iparisal: அவார்டு படத்த பத்தியெல்லாம் பேசறான்னா.பய கொஞ்சம் திறமையானவனா இருப்பாம் போலருக்கு..

@kolaaru: ஆமா..ஆமா...கண்தானத்த பத்திலாம் எழுதியிருக்காப்ல...






5 comments:

  1. ஹா ஹா -செம பேட்டி - விகடன் சேல்ஸ் நல்லா பிக்கப் ஆயிடும் : )) @ஸ்வீட்சுதா

    ReplyDelete
  2. டாங்க்ஸ் மாமி.

    ReplyDelete
  3. செம செம!! கீப் கோயிங்!

    ReplyDelete
  4. இன்னும் தொடர்ந்து கலக்குங்க :))

    ReplyDelete
  5. Manoj Reuben
    இன்னும் தொடர்ந்து கலக்குங்க :).




    :நன்றி

    ReplyDelete